தமிழகத்தில் இன்று மழை - வானிலை மையம்.

தமிழகத்தில் கடந்த நாட்களில் வறண்ட வானிலேயே நிலவி வந்த நிலையில், இன்று(பிப்ரவரி 23) தென்தமிழக மாவட்டங்களிலும் வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சென்னை மற்றும் வட தமிழக உள்மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : தமிழகத்தில் இன்று மழை - வானிலை மையம்