காதல் திருணம் செய்த இளம்பெண் கடத்தல்-3தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டை.

by Editor / 28-01-2023 09:44:39am
காதல் திருணம் செய்த இளம்பெண் கடத்தல்-3தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டை.

தென்காசி அருகே உள்ள கொட்டாக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் இவரது மகன் வினித் இவர் இலஞ்சி பகுதியில் வசித்து வரும் மர அறுவை ஆலை அதிபர் நவீன் படை என்பவருடைய மனைவி கிருத்திகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் இந்த நிலையில் காதலர்களை பிரிக்கும் நோக்கத்தில் நவீன் படையில் பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் கடந்த 25 ஆம் தேதி குத்துக்கல்வலசையில் ஜவுளி எடுக்கச் சென்ற வினித் மற்றும் கிருத்திகா தம்பதியினரின் வினித்தை தாக்கி குருத்திகாவை நவீன் படேல் குடும்பத்தினர் காலத்தில் சென்றனர் இது குறித்து வினித் குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அந்த புகாரின் அடிப்படையில்  குற்றாலம் போலீசார் பெண்ணின் தந்தை நவீன் படேல், தாய் தர்மிஷாபடேல், விஷால்,கீர்த்தி படேல், ராஜேஷ் படேல்,ராசு, மைதினிக், ஆகிய ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். இந்த நிலையில் திருமணம் ஆன இளம் பெண்ணை கடத்திச் செல்வதற்கு உடந்தையாக இருந்த சிலரை தென்காசி மாவட்ட போலீசார் மூன்று தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில் நேற்று  இரவு கேரளாவில் இருந்து  புளியரை நோக்கி வந்த ஒருகாரை புளியரை காவல்துறை சோதனைச் சாவடிப்பகுதியில் மடக்கி பிடித்து காரில் இருந்த  ஒருவரை என சுமார் ஐந்து நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த  சம்பவம் தென்காசி வட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மேலும் கடத்தப்பட்ட இளம் பெண் குஜராத் மாநிலத்திற்கு விமான மூலம் அழைத்துச் செல்லப்பட்டு விட்டதாகவும் ஒரு தகவல் வேகமாக பரவி வருகின்றது மேலும் அவர்களை பிடிப்பதற்காக விமான மூலம் ஒரு தலிப்படையினரும் ரயில் மூலம் ஒரு தனிப்படையினரும் குஜராத் மாநிலம் டோரனூர் பகுதிக்கு செல்வதாக காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளன.

 

Tags :

Share via

More stories