ஒன்றுகூடும் இந்தியா கூட்டணி - நாளை புறப்படும் ஸ்டாலின்

by Staff / 16-03-2024 12:23:51pm
ஒன்றுகூடும் இந்தியா கூட்டணி - நாளை புறப்படும் ஸ்டாலின்

மணிப்பூரில் தொடங்கிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம் நாளை மும்பையில் நிறைவடைய உள்ளது. அங்கு மாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை மும்பை செல்கிறார். இந்த பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். தேர்தல் தேதி இன்று பிற்பகல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், நாளை மாலை இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo