திமுக தலைவர் மு. க .ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் 14 வாக்கு சாவடிகளுக்கு உட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரி பார்க்கும் பணி
திமுக தலைவர் மு. க .ஸ்டாலின் தான் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தமக்கு சாதகமாக பதிவான வாக்குகள் இயந்திரத்தில் சரியாக பதிவாகவில்லை என இந்திய தேர்தல் ஆணையத்திலும் அளித்த புகாரின் அடிப்படையில், 14 வாக்கு சாவடிகளுக்கு உட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரி பார்க்கும் பணி சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள வாக்கு இயந்திரக் கிடங்கில் 29ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மின்னணு இயந்திரத்தில் சரிபார்ப்பு பணி மேற்கொள்ளப்படும். கொளத்தூர் தொகுதியில் வி எஸ் பாவியிடம் திமுக தலைவர் மு க ஸ்டாலின் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தார். 14 குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் விவி பேடு இயந்திரங்கள் சரி பார்க்கும் பணி இரண்டு நாட்கள் ஆக நடந்து வருகின்றன முதல் கட்டமாக இயந்திரங்களில் பதிவாகியுள்ள வாக்குகளை வேட்பாளர்களின் முகவர்களுக்கு காண்பித்து சரிபார்க்கப்பட்டு 500 முதல் 1400 வாக்குகள் வரை மாதிரி வாக்குகள் பதிவு செய்யும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் படி தொழில்நுட்ப சரிபார்ப்பு மட்டுமே நடைபெறுவதாகவும் இது வாக்கு மறு எண்ணிக்கை அல்ல என்பதும் அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார்.
Tags :


















