கோவைக்கு வந்தது செஸ் ஒலிம்பியாட் ஜோதி

by Admin / 25-07-2022 09:19:28am
கோவைக்கு வந்தது செஸ் ஒலிம்பியாட் ஜோதி


உலக  செஸ் 44 வது  ஒலிம்பியாட்  போட்டி வரும்  28 ஆம் தேதி மாமல்லபுரத்தில்  தொடங்கி ஆகஸ்ட் 10  ஆம் தேதி வரை நடக்கிறது. இவ்விளையாட்டின்  தொடக்கமாக  ஜீன் 19 ஆம் தேதி  பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில்  செஸ் ஒலிம்பியாட்  ஜோதியை   ஏற்றி தொடங்கி வைத்தார். பல்வேறு  மாநிலங்களில்  உலா  வந்த  ஜோதி  கோவைக்கு  வந்தது . ஆயிரக்கணக்கான  மாணவர்களும்  பொது மக்களும்   ஜோதியை  வரவேற்றனர். ஜீலை  28  ஆம் தேதி  தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தலைமையில்   நேரு  உள்  விளையாட்டரங்கில்  பிரதமர்  நரேந்திர மோடி   செஸ்  ஒலிம்பியாட் நிகழ்வை தொடங்கி வைக்கிறார். பல்வேறு  நாட்டிலிருந்து  செஸ் போட்டி  நடுவர்கள் வந்துள்ளனர் .தற்பொழுது ஒத்திகை போட்டி  மாமல்ல புரத்தில் நடந்து வருகிறது.

 

Tags :

Share via

More stories