மேட்டூரில் சாம்பல் கழிவு ஓடையில் கூலி தொழிலாளி சடலம்.

மேட்டூர் அடுத்த சங்கிலி முனியப்பன் கோவில் அருகே சாம்பல் கழிவுநீர் ஓடை செல்கிறது. இங்கு மாயதயன் குட்டை எலிகரட்டை சேர்ந்த கூலித் தொழிலாளி முரளி (48) என்பவர் சடலமாக கிடந்தார். இதனை அடுத்து சம்பவம் இடத்திற்கு அங்கு சென்ற போலீசார் இறந்து போன முரளியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை ஈடுபட்டனர்.
Tags :