+1 தேர்வு முடிவுகள் - கோவை மாவட்டம் முதலிடம்
தமிழ்நாடு, புதுச்சேரியில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 1,964 மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 241 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன. தமிழக அளவில் கோவை மாவட்டம் 96.02 சதவிகிதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது. ஈரோடு 95.56 சதவிகிதத்துடன் இரண்டாமிடமும், திருப்பூர் 95.23 சதவிகிதத்துடன் மூன்றாமிடத்திலும் உள்ளன. 81.40 சதவிகிதத்துடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது.
Tags :



















