சிறுபான்மை நல கல்லூரி விடுதிகளில் நூலகங்கள் - முதல்வர்

by Staff / 23-08-2023 01:44:33pm
சிறுபான்மை நல கல்லூரி விடுதிகளில் நூலகங்கள் - முதல்வர்

கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சு போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “திமுக ஆட்சி காலத்தில் சிறுபான்மையினர் நலனுக்கான பல பணிகள் செய்யப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 4 சிறுபான்மை நல கல்லூரி விடுதிகளில் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கிராமப்புற சிறுபான்மை மாணவிகள் இடைநிற்றல் இன்றி கல்வி பயில ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories