திருமயம் அருகே விமரிசையாக நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடி திருவிழா,

by Editor / 16-04-2023 12:55:36pm
திருமயம் அருகே விமரிசையாக நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடி திருவிழா,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடை மாதம் தொடங்கிவிட்டாலே ஆலயங்களில் திருவிழா நடைபெறுவதுபோல கிராமங்களில் மீன்பிடி திருவிழாவானது அனைத்து இடங்களிலும் வெகு சிறப்பாக நடைபெறும். திருமயம், பொன்னமராவதி, அன்னவாசல், இலுப்பூர், விராலிமலை உள்ளிட்ட பகுதிகளில் கோடை காலங்களில் மீன்பிடித் திருவிழா பெரிய விழாவாக காலம் காலமாக நடைபெற்று வருவது வழக்கம் .அதாவது கோடை காலத்தில் கண்மாய்களில் தண்ணீர் வற்றியதும் கிராம மக்கள் ஒன்றிணைந்து இந்த மீன் பிடித்த திருவிழாவை தொன்று தொட்டு நடத்தி வருகின்றனர்.
அதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திலுள்ள  உள்ள கண்மாயில் மீன் பிடி திருவிழா நடைபெற்றது. ஊர் முக்கியஸ்தர்களின் வெள்ளை விடுதல் நிகழ்வுக்கு பின் கோலாகலமாக மீன்பிடி திருவிழா தொடங்கியது. பாரம்பரிய மீன்பிடி உபகரணங்களான ஊத்த, பரி, வலை, உள்ளிடவை வைத்து சுற்றுவட்டாரத்தில் இருக்கும் 60க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்து 500  மேற்பட்ட மக்கள்ஒன்றாக போட்டி போட்டுக் கொண்டு கண்மாயில் இறங்கி கெண்டை, கெளுத்தி ,விரால் ,ஜிலேபி, மீசை கெளுத்தி உள்ளிட்ட மீன்களை லாவகமாக பிடித்தனர். இதில் ஆண்கள், பெண்கள், சிறியவர்கள் என‌ அனைவரும் திரண்டு மீன்களை பிடித்து சென்றனர்.

 

Tags :

Share via