குஜராத் தீ விபத்து - பலியானோர் குடும்பங்களுக்கு நிவாரணம்
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று (மே 25) டிஆர்பி கேமிங் மண்டலத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 9 குழந்தைகள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க இருப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும், விபத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெறுபவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமாக வழங்கவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோர விபத்து தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தும் என முதலமைச்சர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார்.
Tags :