எடப்பாடி பழனிச்சாமி களத்திலும் இல்லை. மக்கள் மனதிலும் இல்லை-திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி
திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்து உள்ளார். அண்மையில் கோவையில் சட்டக்கல்லூரி மாணவி கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணையில் அது குடும்பத் தகராறு என்று கடத்தல் நாடகம் என்றும் தெரிய வந்தது .ஆனால், உண்மை வெளிவருவதற்கு முன்பாகவே தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டிருந்தார் இந்த சம்பவம் ஒரு அரசியல் ஆதாயம் தேட எதிர்க்கட்சிகள் முயல்வதாக குற்றம் சாட்டிய ஆர்எஸ் பாரதி எடப்பாடி பழனிச்சாமி களத்திலும் இல்லை. மக்கள் மனதிலும் இல்லை .ஆனாலும் நானும் ரௌடி தான் என்பது போல என்னை ஏன் விமர்சிக்கவில்லை என்று அவராகவே வந்து வண்டியில் ஏறி கொள்கிறார் என்றும் தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்ற பழனி சாமியின் குற்றச்சாட்டை மறுத்த அவர் எதிர்க்கட்சிகள் தங்கள் அற்ப புத்தியை வெளிப்படுத்தி வருவதாகவும் அவதூறு பரப்பி வருவதாகவும் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சிக்கு முட்டுக் கொடுக்கவே பழனிச்சாமி ஓடோடி வருகிறார் என்றும் தெரிவித்தார்.
Tags :



















