திமுகவின் வெல்லும் தமிழ் பெண்கள் டெல்டா மண்டலம் மகளிர் அணி மாநாடு
இன்று தஞ்சாவூர் மாவட்டம் .செங்கிப்பட்டியில் தி.மு.கவின் வெல்லும் தமிழ் பெண்கள் டெல்டா மண்டலம் மகளிர் அணி மாநாடு பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான திமுக ஸ்டாலின் மாநாட்டிற்கு தலைமை தாங்கி சிறப்புரையாற்றுகிறார். திமுக துணைப் பொதுச் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி கருணாநிதி இந்த மாநாட்டை முக்கிய பங்காற்றி வருகிறார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்கின்றனர். தஞ்சை ,நாகை, கடலூர், திருச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இருந்து சுமார் 1.5 லட்சம் பெண்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது .செங்கிப்பட்டி அருகே சுமார் 200 ஏக்கர் பரப்பிலான பிரம்மாண்ட மைதானத்தில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு சுமார் 5000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் . நள்ளிரவு வரை தஞ்சை மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வர இருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பெண்களின் அரசியல் பங்களிப்பை உறுதி செய்யவும் அரசு நலத்திட்டங்களை எடுத்துரைக்கும் இந்த மாநாடு நிகழ்த்தப்படுகின்றது. இம்மாநாட்டில், அண்மையில் அதிமுகவின் முக்கிய முகமாகவும் ஓ. பன்னீர் செல்வத்தின் அணியில் இருந்தோருமான வைத்தியலிங்கம் அண்மையில் முதலமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்ததோடு இன்று அவர் தமது ஆதரவாளர்கள் பத்தாயிரம் பேரை இந்த மாநாட்டில் இணைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :



















