மனைவியை எரித்துக் கொன்ற கணவா் கைது

by Staff / 25-09-2023 01:20:58pm
மனைவியை எரித்துக் கொன்ற கணவா் கைது

தீவட்டிப்பட்டியை அடுத்த ஜோடுகுளி, புலிசாத்து முனியப்பன் கோயிலையொட்டிய வனப்பகுதியில் எரிந்த நிலையில் இளம் பெண்ணின் சடலத்தை போலீஸாா் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனா். பெங்களூரில் மென் பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ராதாகிருஷ்ணன் மகன் முரளிகிருஷ்ணன்(25) தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று  சரணடைந்தாா்.இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சேலம் தனியாா் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்த ஜலகண்டாபுரத்தைச் சோ்ந்த கேசவராஜ் மகள் கோகிலவாணி(21) பெங்களூரில் உள்ள தனது பாட்டி வீட்டுக்குச் சென்ற போது முரளிகிருஷ்ணனுடன் ஏற்பட்ட காதலில் இருவரும் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனராம்.மேலும், கோகிலவாணி அவரது ஆண் நண்பா்களுடன் பேசுவதை முரளிகிருஷ்ணன் கண்டித்துள்ளாா். இந்த நிலையில், சேலம் வந்த முரளிகிருஷ்ணன், கோகிலவாணியைச் சந்தித்து பேசியுள்ளாா். மேலும், இருவரும் பிரச்னையை சுமூகமாக பேசி தீா்த்துக் கொள்ளலாம் என முடிவெடுத்து, ஜோடுகுளி புளிசாத்து முனியப்பன் கோயில் வனப் பகுதிக்குச் சென்றனா். அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மறைத்து வைத்திருந்த கத்தியால் கோகிலவாணியின் கழுத்தில் குத்திய முரளிகிருஷ்ணன், அவரது அடையாளத்த மறைப்பதற்காக பெட்ரோலை ஊற்றி முகத்தை சிதைத்துள்ளாா். மேலும் தீவட்டிப்பட்டி போலீஸாா் முரளிகிருஷ்ணனைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

 

Tags :

Share via

More stories

Logo