பிசியோதெரபி டாக்டர் தற்கொலை

by Staff / 25-09-2023 01:24:27pm
பிசியோதெரபி டாக்டர்  தற்கொலை

தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சி அரசு மறுவாழ்வு மையம் உள்ளது. இதன் அருகில் காட்டு பகுதியில் உள்ள மரத்தில் ஆண் பிணம் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தது. அந்த பிணம் அழுகிய நிலையில் இருந்தது. தகவல் அறிந்த தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுராணி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அந்த பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணம் தொங்கிய இடத்தின் அருகில் டிராவல் பேக் ஒன்று இருந்தது. அதனை போலீசார் சோதனை செய்தனர். அதில் இருந்த அடையாள அட்டைகளை கொண்டு விசாரணை செய்தனர். விசாரணையில் அவர், விழுப்புரம் மாவட்டம் கம்பர் தெருவை சேர்ந்த பிசியோதெரபி டாக்டர் லட்சுமிவாசன்(47) என்பதும் உடனே போலீசார், டாக்டரின் குடும்பத்துக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த டாக்டரின் மனைவி நிர்மலா, அவருடைய 2 மகள்கள் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது. போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 20-ந்தேதி பிசியோதெரபி அசோசியேஷன் கூட்டம் இருப்பதாக கூறி லட்சுமிவாசன் வீட்டை விட்டு வெளியே சென்றதாகவும், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. மேலும் அவருடைய மனைவி நிர்மலா விழுப்புரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் அவரை தேடி வந்துள்ளனர். தலைவாசல் காட்டுப்பகுதியில் லட்சுமிவாசன் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo