ஒமிக்ரான் வைரஸ் -: தென் ஆப்பிரிக்கா பயணிகள் மறுப்பு

by Admin / 28-11-2021 11:45:13pm
ஒமிக்ரான் வைரஸ் -: தென் ஆப்பிரிக்கா பயணிகள் மறுப்பு

ஒமிக்ரான் வைரஸ் -: தென் ஆப்பிரிக்கா பயணிகள் மறுப்பு

தென் ஆப்பிரிக்காவில் வேகமாக பரவும் ஒமிக்ரான் உருமாறிய புதிய வகை கொரோனா. இந்தப் புதிய வகை தொற்று 10 மடங்கு வீரியம் கொண்டது என்பதால், உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்தியாவில் அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.கொரோனாவின் புதிய மாறுபாட்டு தொற்று பரவலின் எதிரொலியால் தென் ஆப்பிரிகாவில் இருந்து வரும் பயணிகள் நுழைவதற்கு வங்காள தேசத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வங்காச தேசத்தின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜாகித் மாலே கூறியதாவது:-

ஒமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய மாறுபாடு கொண்ட கொரோனா தொற்று மிகவும்ஆக்ரோஷமானது. அதனால், தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென் ஆப்பிரிக்காவில் இருந்து வங்காள தேசத்திற்கு வரும் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அனைத்து துறைமுகங்களிலும் தீவிர சோதனை நடைமுறைகளையும் அரசு வலுப்படுத்தி வருகிறது

 

Tags :

Share via

More stories

Logo