தமிழக வெற்றி கழகத்துடன் எந்த விதமான பேச்சுவார்த்தையோ அல்லது ஆலோசனையோ நடைபெறவில்லை -பாஜக தலைவர் நயினாா் நாகேந்திரன்

by Admin / 10-03-2026 11:09:38pm
 தமிழக வெற்றி கழகத்துடன் எந்த விதமான பேச்சுவார்த்தையோ அல்லது ஆலோசனையோ நடைபெறவில்லை -பாஜக தலைவர் நயினாா் நாகேந்திரன்

என் டி ஏ கூட்டணியில் தமிழக வெற்றி கழகம் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக வெளிவரும் செய்திகள் வதந்தி என தமிழக பாஜக தலைவர் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகத்துடன் எந்த விதமான பேச்சுவார்த்தையோ அல்லது ஆலோசனையோ நடைபெறவில்லை என்றும் தமிழக வெற்றிக்கழகம் ஏற்கனவே தனித்து தான் போட்டியிடுவோம் என்று அறிவித்து உள்ளதையும் அவர் தெளிவுபடுத்தினார். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பியதற்கும் பா.ஜ.கவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் இது ஒரு வழக்கமான நடைமுறை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். தமிழக தேசிய ஜனநாயக கூட்டணி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் உறுதியாக இருப்பதாகவும் அவரே முதலமைச்சர் வேட்பாளர் என்றும் தெரிவித்தார். முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, இது போன்ற கூட்டணி வதந்திகள் குறித்து தவிர்த்து கட்சி மேலிடமே முடிவு எடுக்கும் என்றும் தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் காரணமாக பா.ஜ.க மற்றும் த .வெ. க இடையே கூட்டணி அமைவதற்கான எந்த நகர்வுகளும் இல்லை என்றும் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories