திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து - சிறுவன் உட்பட 7 பேர் பலி.

திண்டுக்கல், திருச்சிரோட்டில் செயல்பட்டுவரும் சிட்டி ஆஸ்பத்திரியில் பயங்கர தீ விபத்து தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு.மருத்துவமனை தீ விபத்தில் 3 வயது சிறுவன் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்என முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன..திருச்சி சாலையில் உள்ள தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் (City hospital) பயங்கர தீ விபத்து.தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்து வருகின்றனர்.தனியார் ஆம்புலன்ஸ் உட்பட 50க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு, நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.சம்பவ இடத்திற்கு வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் சி.சீனிவாசன் இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாநிலச் செயலாளர் வி.பி.பி.பரமசிவம், சம்பவ இடத்தில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி ஆய்வு. மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
Tags : திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து - சிறுவன் உட்பட 7 பேர் பலி.