திடீரென கொட்டி தீர்த்த கனமழை - பழைய குற்றால அருவியில் காட்டாற்று வெள்ளம்.
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில்இடியுடன் கூடிய கனமழை பெய்த நிலையில், இந்த மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பழைய குற்றால அருவியில் தற்போது காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, பழைய குற்றால அருவியில் கடந்த சில நாட்களாக குறைந்த அளவே தண்ணீர் கொட்டி வந்த நிலையில், தற்போது திடீரென பெய்த கன மழையின் காரணமாக பழைய குற்றால அருவியில் தற்போது காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், குற்றாலம் பகுதியில் உள்ள மற்ற அருவிகளான குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து சீராக கொட்டி வரும் நிலையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க ஐந்தருவி மற்றும் மெயின் அருவியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இருந்தபோதும், பழைய குற்றால அருவியில் நீர்வரத்து குறையும் பட்சத்தில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பணிகள் குளிக்க வழக்கம்போல் அனுமதி வழங்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : திடீரென கொட்டி தீர்த்த கனமழை - பழைய குற்றால அருவியில் காட்டாற்று வெள்ளம்.