கசகசா சாகுபடி மற்றும் அபின் உற்பத்தி
தலிபான்கள் இப்பயிரைத் தடை செய்தததையடுத்து ஆப்கானிஸ்தானில் கசகசா (அபினி) சாகுபடி மற்றும் ஓபியம் உற்பத்தி 90 சதவீதத்திற்கும் மேலாக சரிந்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் இறுதியில் 233,000 ஹெக்டேராக இருந்த கசகசா சாகுபடி சுமார் 95 சதவீதம் குறைந்து 2023 ஆம் ஆண்டில் 10,800 ஹெக்டேராக உள்ளது. அதேபோல, அதே காலகட்டத்தில் 6,200 டன்னாக இருந்த ஓபியம் உற்பத்தியானது 333 டன்னாக குறைந்துள்ளது. உலகளாவிய விநியோகத்தில் 80 சதவீதத்திற்கும் மேலான பங்குடன், முன்னதாக ஆப்கானிஸ்தான் உலகின் தலைசிறந்த ஓபியம் உற்பத்தியாளராக திகழ்ந்தது.
Tags :