பிரதமர் நரேந்திர மோடி அஸ்ஸாம் , கௌஹாத்தியில் பத்தாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் அஸ்ஸாம் மாநில கௌஹாத்தியில் பத்தாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். காமாக்யா- சர்ல பள்ளி அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் உள்பட 3 முக்கிய புதிய ரயில் சேவைகளையும் தொடங்கி வைக்கிறார். தேயிலை தோட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு முதல் முறையாக நில பட்டாக்களை வழங்குகிறார். அத்துடன் பிரதமர் கிசான் திட்டத்தின் தவணைத் தொகையை வெளியிடுகிறார். இதனைத் தொடர்ந்து நாளை 22 ஆயிரம் கோடி மதிப்பிலான சில்சார்-சில்லாங் கவுஹாத்தி எக்ஸ்ப்ரஸ் நெடுஞ்சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். 150 மெகாவாட் கொள்ளளவு கொண்ட நீர் மின் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
Tags :


















