சென்னை:3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.
கடந்த சில நாட்களாக அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்று (அக்., 23) சென்னையை அடுத்த செவ்வாபேட்டை, பருத்திப்பட்டு, திருமழிசையில் உள்ள 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஆவடி காவல்துறையினரும், வெடிகுண்டு செயலிழப்பு குழுவினரும் பள்ளிகளுக்கு விரைந்து சென்று தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்ததை அடுத்து, ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Tags : சென்னை:3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.



















