இஸ்ரேல் - ஹமாஸ் போர்... 1100க்கும் மேற்பட்டோர் பலி

by Staff / 09-10-2023 10:58:27am
இஸ்ரேல் - ஹமாஸ் போர்... 1100க்கும் மேற்பட்டோர் பலி

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இந்த நிலையில், இரு நாடுகளிலும் இதுவரை 1100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 700 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலின் தாக்குதலில் 413 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இரு நாடுகளிலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். சனிக்கிழமை தொடங்கிய போர் இன்றும் தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. குறிப்பாக பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via
Logo