அடுத்த தளபதி இவர்தான்.. வெங்கட் பிரபு ரியாக்ஷன்
'ரத்த பூமி' என்ற படத்தின் பூஜை இரண்டு நாள்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் இப்படத்தை இயக்கப்போகும் இயக்குநர், 'இவர்தான் அடுத்த தளபதி' என்று அந்தப் படத்தின் நடிகர் காத்து கருப்பு கலை பற்றி பேசியதை நெட்டிசன்கள் பகிர்ந்து வந்தனர். அதனை பார்த்த இயக்குனர் வெங்கட் பிரபு, "நமக்கு ட்ஃப் காம்ப்பட்டிசன் கொடுப்பாங்க போலேயே சார்" என்று இயக்குநர் சி.எஸ் அமுதனை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இதற்கு சி.எஸ் அமுதன், 'நாம இருக்கும் இடத்தைச் சாதாரணமாக நினைத்துக் கொண்டு சும்மா இருந்திடக் கூடாது சார். உழைச்சாதான் இவங்களோட காலத்துல இருக்க முடியும்" என பதிலளித்துள்ளார்.
Tags :