இனி யூடியூப்பர்களை அனுமதிக்காதீர்கள் -பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை

by Admin / 05-01-2023 11:01:41am
இனி யூடியூப்பர்களை அனுமதிக்காதீர்கள் -பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை


பா.ஜ.க தலைமை அலுவலகம் சென்னை தி.நகரில் உள்ளது. பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலைசெய்தியாளர்களைச்சந்திக்கும் நிகழ்வில்,  அவர் கட்டியிருக்கும்  ராபேல்  கைக்கடிகாரத்தில் உளவு பார்க்கும்  தொழில்நுட்பம் உள்ளதாக  எழுப்பிய  கேள்விக்கு தன்கையிலிருந்த வாட்சை கழற்றிக் கொடுத்து,ஒருநாள் இந்த கடிகாரம் உங்கள் உடமை தமிழகத்தில் எந்த கடையிலும் சோதியுங்கள் .அதில் உளவு பார்க்கும்விசயம் உள்ளதா என்று பார்த்து சொல்லுங்கள் .அதற்கு ஆகும் செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.அடுத்தடுத்த செய்தியாளர் கேள்விக்குகோபமாகி...விருப்பமிருந்தால் என் செய்தியைப்போடுங்கள்.அதற்காக  தேவையில்லாத கேள்விகளைக்கேட்காதீர்கள்.நான் பயப்படமாட்டேன் என்றும் யூடியூப்பர்கள் மீது பாய்ந்தார். நாற்பதாயிரரூபாய்க்குகேமிரா வாங்கிட்டு வந்திராங்க.இவங்களை எல்லாம் நீங்கள் ஏன் அனுமதிக்கிறீர்கள் என்று பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்களைப்பார்த்து கேட்டபடி, கட்சிகாரர்களிடம் இனி யூடியூப்பர்களை அனுமதிக்காதீர்கள் என்று ஆவேசமானார்.

 

Tags :

Share via

More stories

Logo