சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை திருக்கல்யாணம்: ஒரு லட்சம் பேருக்கு அறுசுவை விருந்து.

by Writer / 20-04-2024 11:28:07pm
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை திருக்கல்யாணம்: ஒரு லட்சம் பேருக்கு அறுசுவை விருந்து.

 சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாண விழா மீனாட்சி அம்மன் கோவிலில் நாளை கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில், விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு கல்யாண விருந்து அளிக்கும் பணியினை தனியார் தன்னார்வ அமைப்பு மேற்கொண்டது. 100-க்கும் நூற்றுக்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள், 800க்கும் மேற்பட்ட உதவியாளர்கள், சுமார் ஆயிரம் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்று இரவு முதல் நாளை மாலை 5 மணி வரை வரும் அனைவருக்கும் கேசரி, சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், பிரியாணி, தக்காளி சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம் என சுவையான விருந்து வழங்கப்பட உள்ளது.

இந்த திருக்கல்யாண வைபவத்தை மதுரை மட்டுமல்லாது  சுற்றியுள்ள கிராமங்களக்ஷளிலிருந்தும் மற்றும் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நேரில் வருகை 
தந்து தரிசனம் செய்து செல்வார்கள்.

பக்தர்களின்  வசதிக்காக திருக்கல்யாணத்தை முன்னிட்டு 1லட்சம் பக்தர்களுக்கு மதுரை மேல் வெளி வீதியில் உள்ள சேதுபதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திருக்கல்யாண விருந்துக்கு  தயாராகி வருகிறது.
இதேபோன்று இன்று மாலை மாப்பிள்ளை அழைப்பு விருந்தும் நடைபெற உள்ள நிலையில் திருமுருக பக்த சபை சார்பில் தன்னார்வலர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் விருந்துக்காக காய்கறி வெட்டுதல் சமையல் வேலை என மும்முரமாக செய்து வருகின்றனர்.

இந்த விருந்தின்போது  சாப்பிட்ட கையோடு பக்தர்கள் திருக்கோயில் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மொய்ப்பந்தலில், திருக்கல்யாண மொய் எழுதி, பிரசாதம் பெற்றுக்கொள்வார்கள்.மதுரையில் உள்ள அனைவரும் தங்களது வீட்டு திருமணம் போன்று மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை பார்த்து சாமி்தரிசனம் செய்து விருந்து உண்டு ,மொய் எழுதும் பழக்கம் ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருவது வழக்கம்.

 

Tags : ஜோராக தயாராகும் மீனாட்சி கல்யாண விருந்து!

Share via