அமைச்சர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் - கிருஷ்ணசாமி
அமைச்சர் பொன்முடி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், மக்கள் வரிப்பணத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் பெண்களுக்கான சலுகையை 'ஓசி பயணம்' என்று விமர்சித்த அமைச்சர் பொன்முடி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் பொன்முடி, பெண்களுக்கு அரசு வழங்கியுள்ள இலவச பயண திட்டத்தை பற்றி பேசியது பெரும் சர்ச்சைக்கு வழி வகுத்தது. பெண்கள் அரசுப்பேருந்துகளில் 'ஓசி பயணம்' செய்கிறீர்கள் என்று அமைச்சர் பேசியதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Tags :