ஆம்னி பேருந்துகளில் கோயம்பேட்டிலிருந்து பயணிகளை ஏற்றி இறக்கலாம்- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ஆம்னி பேருந்துகளை சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க வேண்டும் என்ற மாநில போக்குவரத்து ஆணையத்தின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.இத்திருப்பின்படி தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றி இறக்குவதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி கோயம்பேடு போரூர் சூரப்பேடு மாதவரம் ஆகிய பகுதிகளில் இருந்து வழக்கம் போல பயணிகளை ஏற்றி இறக்கிக் கொள்ளலாம். தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை சென்னை நகருக்குள் வரக்கூடாது என 2024 ஜனவரி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சட்ட விதிகளுக்கு புறம்பானது தன்னிச்சையானது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த ஆம்னி பேருந்துகள் சென்னையில் பயணிகளை ஏற்றி இறக்குவதற்கு மட்டுமே நகருக்குள் வரவேண்டும் என்றும் நிரந்தரமாக நிறுத்த அனுமதி இல்லை என்றும் பேருந்து உரிமையாளர்கள் சொந்த பணிமனைகளில் பேருந்து நிறுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. சென்னை நகரின் நெருசலை குறைக்கும் பொருட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலைய த் திறப்பிற்கு பிறகு ஆம்னி பேருந்துகள் அனைத்தும் அங்கிருந்துதான் இயக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் வழக்கு தொடுத்திருந்தனர் அந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானதை அடுத்து இனி கோயம்பேட்டில் இருந்தும் தென் மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகளில் ஏறி இறங்கிக் கொள்ளலாம்.
Tags :



















