அடுத்த பிறவியில் விவசாயியாக பிறக்க வேண்டும் என்று முதலமைச்சர் கூறினார். அதற்கு பதிலாக இப்பொழுதே விவசாயிகளுக்கு நன்மைகளை செய்யலாம்

by Admin / 07-08-2026 02:36:31am
அடுத்த பிறவியில் விவசாயியாக பிறக்க வேண்டும் என்று முதலமைச்சர் கூறினார். அதற்கு பதிலாக இப்பொழுதே விவசாயிகளுக்கு நன்மைகளை செய்யலாம்

தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வேளாண் பட்ஜெட் குறித்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்கள் கூட்டத்தில், தற்போதைய அரசு முதல்முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது என்றும் எனவே எடுத்த உடனே எல்லாவற்றையும் விமர்சித்து கொண்டு இருக்க வேண்டாம் என்றும் அடுத்த பிறவியில் விவசாயியாக பிறக்க வேண்டும் என்று முதலமைச்சர் கூறினார். அதற்கு பதிலாக இப்பொழுதே விவசாயிகளுக்கு நன்மைகளை செய்யலாம் என்றும் இதன் மூலம் அவர் தற்போது ஒரு விவசாயியாக வாழ முடியும் என்றும் அரசு விவசாயிகள் மீது அதிக அக்கறை காட்ட வேண்டும் என்று விவசாயிகளுக்கான உரிமைகளை அரசு முழுமையாக வழங்க வேண்டும் என்றும் தெரிவித்ததோடு அந்தந்த மாவட்டங்களில் இயங்காமல் இருக்கும் தொழிற்சாலைகளை மீண்டும் இயக்க வேண்டும் என்றும் இதனால் உள்ளூரிலேயே மக்களுக்கு போதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று வேலை தேடி மக்கள் சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு இடம் பெறுவது தடுத்து நிறுத்தப்படும் என்றும் இதற்கு தேவையான உரிய நடவடிக்கைகளை அரசு விரைந்து எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

 

Tags :

Share via

More stories

Logo