வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

தனியார் ரயில்வே பாலத்தில் தேங்கும் தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் ஆப்பரேட்டரை தாக்கிய வழக்கறிஞர் உட்பட மூன்று பேர் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். சி. சி. குவாரி ரோட்டில் சிலும்பாகவுண்டனுார் அருகே உள்ள ரயில் சுரங்கப்பாதையில் தேங்கும் நீரை மோட்டார் வைத்து அகற்றும் பணியில் சிலும்பாகவுண்டனுாரை சேர்ந்த பழனிச்சாமி 47, உள்ளார். அந்த வழியாக டூவீலரில் வந்தவர் கீழே விழுந்தார். அங்கு குஜிலியம்பாறையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜாராம், அவரது நண்பர்கள் ராகவேந்திரன் ராஜரத்தினம் காரில் வந்தனர். காரை நிறுத்தி பார்த்துக் கொண்டிருந்தனர். போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதால் ஆப்பரேட்டர் காரை எடுக்க கூறினார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வழக்கறிஞர் தரப்பினர் ஆப்பரேட்டர் பழனிச்சாமியை தாக்கினர். அங்கு வந்த அவரது மனைவி, தம்பி மனைவி , உறவினரையும் தாக்கினர். வழக்கறிஞர் உட்பட மூவர் மீது குஜிலியம்பாறை போலீசார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதை கண்டித்து வேடசந்துார் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டம் செய்தனர். வழக்கறிஞர் ராஜாராம் கூறுகையில், '' 30 வழக்கறிஞர்களுடன் எஸ். பி. , பாஸ்கரனை சந்தித்து முறையிட்டோம். வழக்கு உண்மை தன்மை குறித்து விசாரிக்கிறேன் என்றார்'' என கூறினார்.
Tags :