மின்வாரிய அலுவலகத்தில் பெண் ஊழியரை கட்டிப்பிடிக்க முயன்ற இளநிலை பொறியாளர் கைது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் துணை மின் அலுவலகத்தில் திருச்செந்தூரை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 6 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அந்த அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக உள்ள மதுரை திருநகரை சேர்ந்த கண்ணன் (49) பணிபுரிந்து வருகிறார். இவர் சாத்தான்குளத்தில் தங்கி இருந்து பணிபுரிந்து வருகிறார். இவர் அந்த பெண் அலுவலகத்தில் இருந்த போது பொறியாளர் கண்ணன் தவறான எண்ணத்துடன் அவரை கட்டிப் பிடிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அலறியடித்து ஓடி உள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நாககுமாரி விசாரணை நடத்தி கண்ணனை கைது செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags : மின்வாரிய அலுவலகத்தில் பெண் ஊழியரை கட்டிப்பிடிக்க முயன்ற இளநிலை பொறியாளர் கைது.