வயநாட்டில் நிலச்சரிவு- உயிரிழப்பு எண்ணிக்கை 316 ஆக உயர்வு

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்டு இதுவரை 316 பேர் உயிரிழப்பு316 பேரின் சடலங்கள் இதுவரை மீட்பு; 240 பேரை காணவில்லை என கேரள அரசு அறிவிப்பு.நிலச்சரிவில் 2 பள்ளிகளை சேர்ந்த 27 மாணவர்கள் உயிரிழப்புமுண்டக்கை கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் இரு பள்ளிகளை சேர்ந்த 27 மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல். 2 பள்ளிகளை சேர்ந்த 23 மாணவர்களை காணவில்லை என கேரள பள்ளிக்கல்வித்துறை தகவல்.வயநாடு பகுதியில் ராணுவத்துடன் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது இஸ்ரோ.மண்சரிவு ஏற்பட்ட மலைப் பகுதியை RISAT SAR தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புகைப்படமாக எடுத்து அதன் முழு தகவல்களை வழங்கி உள்ளது இஸ்ரோ.இஸ்ரோ தகவலின்படி, மண் சரிவு ஆரம்பப் புள்ளியில் இருந்து 8 கிலோ மீட்டர் பயணித்து முடிந்திருக்கிறது என்றும் ஒட்டுமொத்தமாக 86,000 சதுர அடி பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்களை வழங்கி உள்ளது.
வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவு.நிலச்சரிவு பாதிப்பு குறித்து விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் நேரில் ஆய்வு செய்ய கேரள அரசு தலைமைச் செயலாளர் நேற்று தடை விதித்திருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Tags : வயநாட்டில் நிலச்சரிவு- உயிரிழப்பு எண்ணிக்கை 316 ஆக உயர்வு