-பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன்-அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து பேச உள்ளார்.
இன்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்நயினார் நாகேந்திரன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பசுமைவழிச் சாலை இல்லத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக சந்தித்து பேச உள்ளார். நேற்று முன்தினம் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார் அந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும் தமிழக அரசு நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாமக அன்பு மணி ராமதாஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் தன்னை இணைத்துக் கொண்டார். இன்று நடைபெறும் சந்திப்பில் தொகுதிகள் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags :



















