வலி நிவாரணி மாத்திரை சாப்பிட்ட மாணவர் பலி

கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியம் அடுத்த கா.பாளையத்தை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகன் ஹரி (12) தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். ஹரிக்கு தலைவலி ஏற்பட்டதால், அவரது தாய் ரஞ்சிதா சாப்பிடும் வலி நிவாரணி மாத்திரைகள், ஒன்பதை சாப்பிட்டு துாங்கினார். கடந்த, 4ஆம் தேதி காலை ஹரி எழவில்லை. அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்த நிலையில் உயிரிழந்தார். போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
Tags :