தமிழக பாஜகவில் இருந்து வெளியேறும் பிரபலம்?

தமிழக பாஜகவில் இருந்து பிரபல பெண் நிர்வாகி ஆலிஷா அப்துல்லா வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தமிழக பாஜகவின் புதிய மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டதில், அவருக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படாததால் ஆலிஷா அதிருப்தியில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், 'திறமைக்கு அங்கீகாரம் கொடுக்காத இடத்திலும், உழைப்புக்கு உயர்வு கொடுக்காத இடத்திலும் ஒருபோதும் இருக்காதே' என தற்போது அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
Tags :