இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் மேயர்.

by Staff / 05-11-2025 11:29:29am
இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் மேயர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் பதவிக்கான தேர்தலில் ஆளுங்கட்சி வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார் ஜனநாயக கட்சியின் ஸோரான் மம்தானி.முதல் இந்திய வம்சாவளி மேயர் மற்றும் இஸ்லாமிய மேயர்  என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஸோரான் மம்தானி.

ஜோஹ்ரான் மம்தானி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.  அவரது தந்தை மஹ்மூத் மம்தானி, பம்பாயில் பிறந்து உகாண்டாவின் கம்பாலாவில் வளர்ந்தார். அவர் ஒரு இந்திய-உகாண்டா வம்சாவளியைச் சேர்ந்தவர். அவர் ஒரு குஜராத்தி முஸ்லிம். 

அவரது தாயார் மீரா நாயர், ஒரிசாவின் ரூர்கேலாவில் பிறந்தார். அவர் புவனேஸ்வரில் வளர்ந்தார். அவரது குடும்பம் பஞ்சாபி வம்சாவளியைச் சேர்ந்தது மற்றும் டெல்லியை பூர்வீகமாகக் கொண்டது.

 

Tags : இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் மேயர்.

Share via