தென்காசியில் இருந்து வாரணாசிக்கு 9 நாட்கள் சுற்றுலா சிறப்பு ரயில் இயக்கம்.

by Staff / 08-09-2023 04:11:25pm
தென்காசியில் இருந்து வாரணாசிக்கு 9 நாட்கள் சுற்றுலா சிறப்பு ரயில் இயக்கம்.

இந்திய ரயில்வேயில் சுற்றுலா பிரிவான irctc   ஆனது சுற்றுலா பயணிகளுக்காக பிரத்தியோக பாரத் கவுரவம் சுற்றுலா ரயிலை அறிமுகப்படுத்தி உள்ளது.தீபாவளி பண்டிகை முன்னிட்டு தீபாவளி அன்று கங்கா ஸ்நானம் சிறப்பு யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலில் மூன்று குளிர்சாதன பெட்டிகள், எட்டு ஸ்லீப்பர் கோச்சிகள், ஒரு பேட்டரி கார், இரண்டு பவர் கார்கள், என்ன மொத்தம் 14 பெட்டிகள் உள்ளன, பாரத் சுற்றுலா ரயில் ஐ.ஆர்.சி.டி.சி, தென்மண்டலம் சார்பில் நவம்பர் 09.ஆம் தேதி அதிகாலை தென்காசியில் இருந்து தீபாவளி கங்கா ஸ்தான சிறப்பு யாத்திரை என்ற பெயரில் சுற்றுலா பயணத்தை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இதில் பயணிகள் தீபாவளி அன்று காசியில் கங்கா ஸ்நானம் செய்து பின்னர் ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி தரிசிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த சுற்றுலா ரயில் தென்காசியில் இருந்து நவம்பர் 9 ஆம் தேதி தொடங்கி ராஜபாளையம் சிவகாசி விருதுநகர் மதுரை திருச்சி தஞ்சாவூர் கும்பகோணம் மயிலாடுதுறை சிதம்பரம் மற்றும் சென்னை வழியாக காசி திரிவேணி சங்கமும் அலகாபாத் கயா மற்றும் ராமேஸ்வரம் வாங்கிய புண்ணிய தளங்களுக்கு சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுப்பயணம் தொடங்கு கிறது.
09.11. 23  முதல் 8 இரவுப்பகுதியும் ஒரு நாள் பகல் பொழுதும் என மொத்த ஒன்பது நாட்கள் இந்த ரயில் பயணம் நடைபெறுகிறது. இந்த ரயில் கட்டணம் குளிர்சாதன பெட்டியில் ரூபாய் 30 ஆயிரத்து 500 ரூபாய் ஒரு நபருக்கு என்றும் ஏசி அல்லாத கோச்சுகளில் 16 ஆயிரத்து 850 ரூபாய் ஒரு நபருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரத்தியோக பாரத் கௌரவ சுற்றுலா ரயில் முக்கிய அம்சங்கள் உள்ளூர் பகுதியை பார்வையிடுவதற்கான போக்குவரத்து தென்னிந்திய சைவ உணவு சுற்றுலா மற்றும் தனியார் பாதுகாப்பு வசதிகள் பயணக் காப்புறுதி மத்திய மாநில மற்றும் அரசு பொதுத் துறை நிறுவனங்களின் ஊழியர்கள் இந்த சுற்றுலாவில் பயணித்தால் எல்டிசி சான்றிதழ்களின் பெறலாம் என ஐ ஆர் சி டி சி யின் தெற்கு பொது மேலாளர் ராஜலிங்கவாசு செய்தியாளர்களிடம் குற்றாலத்தில் நடைபெற்ற சந்திப்பில் தெரிவித்தார்.

 

Tags :

Share via