கூவமாக மாறிய நெல்லை மார்க்கெட்... கழிவு நீர் கால்வாய் உடைப்பு

by Editor / 05-03-2025 01:32:36pm
கூவமாக மாறிய நெல்லை மார்க்கெட்... கழிவு நீர் கால்வாய் உடைப்பு

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை முருகன் குறிச்சி முதல் சமாதானபுரம் வரை கால்வாய் பாலங்களை விரிவாக்கும் பணி தொடங்கியுள்ளது.  திருநெல்வேலி மார்க்கெட் அரசு போக்குவரத்துக் கழக பராமரிப்பு நிலையம் முன்பு உள்ள  கழிவு நீர் கால்வாய்  திடீரென உடைந்தது .இதானல், கழிவு நீர் வெளியேறி நெல்லை மார்க்கெட் பகுதியில் ஆறாக ஓடுகிறது.  திருநெல்வேலி யில் இருந்து  திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடிக்கு செல்லக்கூடிய அந்த சாலை முழுவதுமே முழங்கால் அளவிற்கு கழிவு நீர்  ஓடுகிறது.  இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளார்கள் . பொதுமக்களும் கழிவுநீர் ஓடும் சாலையில்இறங்கி செல்லக்கூடிய சூழ்நிலை தான் இருக்கிறது.  இதனால் அந்தப் பகுதியில்   துர்நாற்றமும் வீசுகிறது.  தற்போது அரசு பொது தேர்வு நடைபெறுவதை ஒட்டி பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவ மாணவிகளும் கழிவுநீர் ஓடும் சாலையில் செல்ல வேண்டிய சூழல்தான் உள்ளது. உடனடியாக, சாலையில் ஓடக்கூடிய கழிவுநீர் அகற்றப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

 

Tags :

Share via