ரூ.5 லட்சம் நிவாரணம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

கடலூர் ரயில் விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் 2 மாணவர்கள் பலியாகியுள்ளனர். இந்த விஷயத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள தெற்கு ரயில்வே, படுகாயமடைந்தோருக்கு ரூ.2.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
Tags :