14 கிலோ கஞ்சா வைத்திருந்த மூவர் கைது-கஞ்சா, கார், இருசக்கர வாகனம், செல்போன்கள் உள்ளிட்டவைகள் பறிமுதல்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் பகுதியை சேர்ந்த சம்பத்குமார் மற்றும் வடக்குப்புதூரை சேர்ந்த அண்ணாமலை என்ற அஜித் ஆகிய இருவரும் வட மாநிலங்களில் இருந்து லோடு ஏற்றி சென்று வரும் கனரக லாரியில் டிரைவராக பணிபுரிந்து வரும் நிலையில் வடமாநிலங்களில் இருந்து கஞ்சாவை கடத்தி பனவடலிசத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்ய உள்ளதாக சிறப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் கையும் களவுமாக பிடிபட்டனர்.
இவர்களுக்கு உதவியதாக அப்பகுதியை சேர்ந்த கடல் என்ற இளைஞரையும் சேர்த்து மூன்று பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 14 கிலோ கஞ்சா பொட்டலங்கள், கார் ஒன்றும், இருசக்கர வாகனங்கள் மற்றும் செல்போன்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்...
Tags : 14 கிலோ கஞ்சா வைத்திருந்த மூவர் கைது-கஞ்சா, கார், இருசக்கர வாகனம், செல்போன்கள் உள்ளிட்டவைகள் பறிமுதல்