தென்காசி மாவட்ட 6வது காவல் கண்காணிப்பாளராக S.அரவிந்த் பதவி ஏற்றுக்கொண்டார்.
தென்காசி மாவட்டத்தின் 6வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக S.அரவிந்த் பதவி ஏற்றுக்கொண்டார்.இவர் 21.07.2005 ஆம் ஆண்டு காவல் பணியில் இணைந்து துணை காவல் கண்காணிப்பாளராக திருவாரூர், கரூர், திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் சென்னை சைபர் கிரைம் பிரிவிலும், போதை பொருள் நுண்ணறிவு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளராக சென்னையிலும், தனிப்பிரிவு குற்ற புலனாய்வு துறையில் காவல் கண்காணிப்பாளராக சென்னையிலும், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும் மேலும் திருப்பூர் மாநகரம், நுண்ணறிவு பிரிவு சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளி மாநகரம் தலைமையகம் ஆகிய இடங்களில் காவல் துணை ஆணையராக பணிபுரிந்து தற்போது தென்காசி மாவட்டத்தின் 6வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி ஏற்றுக்கொண்டார்.
Tags : தென்காசி மாவட்ட 6வது காவல் கண்காணிப்பாளராக S.அரவிந்த் பதவி ஏற்றுக்கொண்டார்.