பேஸ்புக், வாட்ஸ் அப் முடக்கம்: நிறுவனத் தலைவருக்கு ரூ.600 கோடி இழப்பு

இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், பேஸ்புக் சேவை பாதிக்கப்பட்டதால் அதன் நிறுவனத் தலைவர் மார்க் ஸக்கர்பர்க்குக்கு ரூ.600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், பேஸ்புக் செயலிகள் திங்கள்கிழமை இரவு ஆறு மணி நேரம் முடங்கின. இதனால் அந்த நிறுவனத் தலைவர் மார்க் ஸக்கர்பர்க் மன்னிப்பு கோரினார். இந்நிலையில் தொடர்ந்து ஆறு மணி நேரம் பேஸ்புக் சேவை தடைப்பட்டதால் அமெரிக்கப் பங்குச் சந்தையில் பேஸ்புக் சந்தை மதிப்பு 5 சதவீதம் சரிந்தது. இதனால், மார்க் ஸக்கர்பர்க்குக்கு ரூ.600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், மார்க் ஸக்கர்பர்க்கின் சொத்து மதிப்பு ரூ.52 ஆயிரம் கோடியாகச் சரிந்துள்ளது. இதனால், ஸக்கர்பர்க் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்திலிருந்து 5வது இடத்திற்குத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags :