70 ஆயிரம் மதிப்பிலான குட்கா பறிமுதல்

சத்தியமங்கலம் தமிழக – கர்நாடக எல்லை வழியாக தமிழகத்திற்கு காரில் கடத்தி வந்த ரூ 70 ஆயிரம் மதிப்பிளான 10 மூட்டை குட்கா போதை பொருள் பறிமுதல் டிரைவரிடம் போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் இருந்து திருப்பூர்க்கு கார் சென்று கொண்டு இருந்தது. தமிழக - கர்நாடக எல்லையில் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காராப்பள்ளம் செக்போஸ்டில் போலீஸார் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து கொண்டு இருந்தனர். இந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது கார் டிக்கியில் மறைத்து கடத்தி வந்த தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், கணேஸ் கூலிப் அடங்கி குட்கா புகையிலைப் பொருட்கள் 10 மூட்டைகள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல செய்தனர். அதன் மதிப்பு சுமார் ரூபாய் 70 ஆயிரம் இருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர். பின்னர் காரை ஆசனூர் ஸ்டேசனுக்கு கொண்டு சென்றனர், கார் டிரைவரிடம் விசாரித்த போது திருப்பூர், காட்டன் மில் ரோடு, முருகானந்த புரத்தைச் சேர்ந்த ராஜா(39) என தெரியவந்தது. ஆசனூர் போலீஸார் தொடர்ந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
Tags :