ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு.

by Editor / 11-04-2023 04:30:34pm
ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆத்தூரில்  தாமிரபரணி ஆற்று பாசனத்தில்  ஆத்தூர்,  மாரந்தலை, வெள்ளக்கோவில், சுகந்தலை, மேல ஆத்தூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 500 ஏக்கரில்  வெற்றிலை பயிரிடப்படுகிறது.

மேலும் தாமிரபரணி ஆற்றுப் பாசனத்தின் மூலமாகவே பயிரிடப்பட்டுள்ளதால் இந்த வெற்றிலை காரத்தன்மை குறைவாகவும் ஜீரண சக்தி அதிகமாகவும் உள்ளதாக கூறப்படுகிறது.

பொதுவாக அறுவடை செய்யப்படும் வெற்றிலை கோடையில் மூன்று முதல் ஐந்து நாட்கள் மற்றும் குளிர்காலத்தில் ஐந்து முதல் ஆறு நாட்கள் வரை அதன் தன்மை மாறாமல் இருக்கும். ஆனால் ஆத்தூர் வெற்றிலை  எந்த காலநிலையிலும் ஏழு முதல் பத்து நாட்கள் வரை அதன் தன்மை மாறாமல் இருக்கும். இதனால் ஆத்தூர் வெற்றிலை இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு கிடைத்தது அப்பகுதி விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும்  வெற்றிலை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய கடன்கள் வழங்கவும், காப்பீடு வசதி செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

Tags :

Share via