அமிதாப் பச்சன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் நடிகர் தர்மேந்திரா, பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி ஆகியோரது வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து காவல்துறைக்கு மர்ம நபர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவர்களது வீடுகளுக்கு அருகே வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்கு அழைப்பு வந்துள்ளதால், காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். பயங்கரவாத தாக்குதலுக்காக 25 பயங்கரவாதிகள் மும்பையில் உள்ள தாதரை அடைந்ததாகவும் அந்த நபர் கூறியுள்ளதால், பெரும் பரபரப்பு நிலவுகிறது. பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மர்ம நபர்கள் குறித்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
Tags :



















