தமிழக ஆளுநரை சந்தித்து பாஜக தலைவர் அண்ணாமலை புகார்.

by Editor / 12-12-2021 08:09:32pm
தமிழக ஆளுநரை சந்தித்து  பாஜக தலைவர் அண்ணாமலை புகார்.

தமிழகத்தில் சமீபத்தில் மதுரையில் கைது செய்யபட்ட மாரிதாஸ்  விவகாரம் பாஜகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்றையதினமேசில இடங்களில் ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. இந்த கைது விவகாரத்தை  திமுக அரசுக்கு எதிராக பெரிய அளவில் கொண்டு செல்ல தமிழக பாஜக தரப்பு களமிறங்கி உள்ளது என கூறப்படுகிறது.அதே சமயம் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில்  முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதா கிருஷ்ணன் பேசும்போது மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பயங்கரவாதிகளின் நடமாட்டமுள்ளதாக செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து திமுகவின் மீது பாஜக தாக்குதல்களை தொடுக்க தொடங்கியுள்ளது.இதன் காரணமாகவே சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மாநில பாஜக தலைவர் கே.அண்ணாமலை பொறுமையை இழந்து பேசியதாக சொல்லப்படுகிறது. அதாவது, தமிழக போலீசார் டிஜிபி கட்டுப்பாட்டிலேயே இல்லை. என்றும்,

சைக்கிளில் செல்வதற்கும் செல்பி எடுப்பதற்கும் தான், இங்கு தமிழக டிஜிபி உள்ளார். திமுக மாவட்ட செயலாளர்களும், ஐடி பிரிவினரும் தான் போலீசாரை கட்டுக்குள் வைத்துள்ளனர். தமிழக அரசுக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன். எங்கள் கட்சி பொறுமையாக இருக்கிறது. ஆனால் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

மேலும் பஜகவை சேர்ந்தவர்கள் தொடர்ந்து கைதாகி வருவதால் அதிர்ச்சியடைந்த தமிழக பாஜக முக்கிய முடிவை எடுத்தது.இதன் முதல்கட்டமாக தமிழக  ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை நேரில் சந்தித்து தமிழகத்தில் தொடர்ந்து கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வண்ணம் பாஜகவினர் கைதாகி வருவதாக ஆளுநரிடம்  கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக திமுக அரசு போடும் வழக்குகளை எதிர்த்து இன்று காலை மணியளவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பாகவினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது குறைப்பிடத்தக்கது.

தமிழக ஆளுநரை சந்தித்து  பாஜக தலைவர் அண்ணாமலை புகார்.
 

Tags :

Share via