திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு நாலு தொகுதிகள்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோருக்கு இடையே 2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு நாலு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. மூன்று தொகுதிகளில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்றும் ஒரு தொகுதியில் மதிமுக தேர்தல் ஆணையம் ஒதுக்கும் தனி சின்னத்தில் போட்டியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆறு இடங்களில் போட்டியிட்ட மாதிரி முக்க இந்த முறை 12 இடங்களை கூறியிருந்தது இறுதியில் நாலு இடங்களில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. கட்சியின் அங்கீகாரத்தை பாதுகாப்பதற்காக ஒரு தொகுதியில் மட்டும் தனிச் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார்.
Tags :


















