இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைஉடனடியாகக் கைது செய்ய வேண்டும்-மம்தா பானர்ஜி
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாகச் செயல்படுவதாகக் கூறி, அவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சரும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி மற்றும் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த பிற எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையான கோரிக்கைகளை எழுப்பி வருகின்றனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியில் மற்ற இரு தேர்தல் ஆணையர்களுக்குத் தெரியாமல் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 14 முக்கிய முடிவுகளை எடுத்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு வெளியிட்ட புலனாய்வு அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.
தேர்தல் ஆணையத்தின் தார்மீக உரிமை சீர்குலைந்துவிட்டதாகக் கூறிய மம்தா பானர்ஜி, பாஜகவிற்கு ஆதரவாகத் தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளதாகவும் பழைய வாக்காளர் பட்டியலைக் கொண்டு மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை முற்றிலுமாகச் சீர்குலைத்துள்ளது என்றும், அவர் உடனடியாகப் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத், ஞானேஷ் குமாரை உடனடியாக இடைநீக்கம் செய்து அவர் மீது சட்டப்பூர்வ கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
•
ஆர்ஜேடி ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய அமைப்பே அதற்குத் தீங்கு விளைவிப்பது கவலையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்கள் வெளியிட்ட விளக்கத்தில், இறுதி முடிவுகள் அனைத்தும் மூன்று ஆணையர்களின் ஒருமித்த கருத்து மற்றும் ஒப்புதலின்படியே எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளன.
Tags :



















