கிராம மக்களுக்கு கருப்புக்கொடி ஏந்தி ஒப்பாரி வைத்தும் போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்து ஊரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுவட்டார கிராம மக்கள் கருப்புக் கொடியை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைய உள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில் நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் தொடங்க உள்ளன. தகவலறிந்து வந்த போலீசார் நிலத்தை கையகப்படுத்தும் தொடர்பாக நாளை நடைபெறும் கருத்து கேட்பு கூட்டத்தில் குறைகளை தெரிவிக்குமாறு பேச்சுவார்த்தை நடத்தி போராட்டக்காரர்களை அனுப்பி வைத்தனர்.
Tags :