தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் 37 கோடியே 84 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 3 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்..
தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்திலிருந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் 42 கோடியே 94 இலட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 14 விளையாட்டுத் துறை கட்டடங்களை திறந்து வைத்து, 37 கோடியே 84 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 3 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்..சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், சிவகங்கை மற்றும் தேனி ஆகிய இடங்களில் 10.38 கோடி ரூபாய் செலவில் மகளிருக்கான 2 "தோழி" விடுதிக் கட்டடங்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டம், தட்டப்பாறை அரசினர் குழந்தைகள் இல்லத்தில் 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். அத்துடன்.தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எம்ஆா்எப் நிறுவனம், 5300 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில், 1000 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சிவகங்கை மாவட்டம், சிப்காட் - இலுப்பைக்குடி தொழிற் பூங்காவில் புதிய டயர் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது
Tags :













.jpg)




