தமிழ்நாட்டில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு.

by Editor / 05-05-2024 11:06:57am
தமிழ்நாட்டில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு.


தமிழ்நாட்டில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. மேலும், அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக நேற்று தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், இன்றும் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மேலும், வருகிற மே 7, 8, 9 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

 

Tags : தமிழ்நாட்டில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு.

Share via

More stories